இனிமேல் தான் ஓபிஎஸ்-ன் ஆட்டமே! விரைவில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம் - தகவல் சொன்ன முக்கிய புள்ளி! - Seithipunal
Seithipunal


இனிமேல் தான் ஓ பன்னீர்செல்வத்தின் ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள் என்று, அவரின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஒற்றை தலைமை விவரத்தில் உச்சநீதிமன்ற திறப்பு படி தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சென்றுள்ளது. தீர்ப்பை அடுத்து உரிமையியல் நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு நாட உள்ளது.

இதற்கிடையே, ஓபிஎஸ்-ன் தாயார் காலமானது, அவரின் ஆதரவு ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தலைவர்களும் ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே சி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி தெரிவித்ததாவது, "தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவடைந்துள்ளார். ஆனால் அவரின் மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமியோ அவரின் ஆதரவாளர்களோ யாரும் நேரில் வரவில்லை.

இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் செய்தியாளர் கேட்ட பின்பே எடப்பாடி பழனிசாமி இரங்கலை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவின் போது ஓ பன்னீர்செல்வம் கடைசி வரை இருந்து, அவரின் துக்கத்தில் பங்கு எடுத்தார். ஆனால் அவரின் தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுகவில் பிளவு என்பது உறுதியாகி உள்ளது.

இனிமேல் பாஜகவை நம்பி எந்த பயனும் கிடையாது என்று ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதுதான் உண்மையும் கூட. ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட ஆட்டம் இனிமேல் தான். பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது போல தமிழக அரசியலில் விரைவில் நிறைய மாற்றங்கள் நடைபெற போகிறது" என்று புகழேந்தி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Next plan Pugazhenthi say the truth 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->