ஓபிஆர் எம்பி பதவிக்கு ஆபத்து இல்லை - அடித்து கூறும் கண்ணன்!
OPS Side Kannan say About O P Ravindranath case judgement
தேனி மக்களவை தொகுதி தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று, திமுக பிரமுகர் மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தீர்ப்பு குறித்து தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவிக்கையில், "உண்மை தோற்பதில்லை என்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு.
காலதாமதம் ஆனாலும் நீதி வென்றுள்ளது. வாக்குப் பெட்டிகளை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்து ஒ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன், தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களுக்கு இது பின்னைடைவு இல்லை. டெக்கினிகள் பிழை, சொத்து ஆவணம் சமர்பித்ததில் உள்ள பிழைகளை தெரிந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய 30 நாள் கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
எங்கள் தரப்பில் நிச்சயம் மேல்முறையீடு செய்வோம். இதனை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. நாங்கள் செய்த கவனக்குறைவால் இந்த தீர்ப்பு வந்துள்ளது. எம்பி பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
OPS Side Kannan say About O P Ravindranath case judgement