ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடையாள அட்டையில் தங்களின் புகைப்படத்துடன் துணைவரின் புகைப்படத்தையும் ஒட்டி புதிதாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Order to issue medical insurance identity card with photo to pensioners


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->