பலி 50 ! தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டை தொடங்க உத்தரவு!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டையை தொடங்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்தும் படியும், கள்ளச்சாராயம் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் படியும் போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஏற்கனவே சாராய வழங்குகளில் தொடர்புடையவர்களை கண்காணிப்பில் வைத்திருக்குமாறும் ஏற்கனவே சாராயம் தயாரித்த பகுதிகளையும் இடங்களையும் ரகசியமாக கண்காணிக்கும் படியும் அவர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராயத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம் பரிந்துரை செய்யப்பட்டு வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவதாக உயர்போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Order to start anti counterfeiting hunt across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->