மின்வாரிய ஊழியர் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு! அகவிலை படியை உயர்த்தியது தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


அறிவிக்கப்பட்ட காத்திருப்பு போராட்டம் நடக்குமா?

தமிழகம் முழுவதும் வரும் 29ஆம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர்கள் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது. 

அந்த அறிவிப்பில் தங்களின் கோரிக்கையான பிபி.2 அறிவிப்பானை ரத்து செய்வது, அகவிலை உயர்வு, தனியார் பங்கீட்டுடன் மின்வாரியத்தை மறுசீரமை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். 

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர்!

தமிழக அரசு ஊழியர்கள்,  ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்திருந்தார். 

அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் மின்வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்பிடி உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசாணை வெளியிட்டுள்ளது. 

வெளியிடப்பட்ட அரசாணை!

அந்த அரசாணையின்படி "மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும் திருத்தப்பட்ட அகவிலைப்படியின் அடிப்படையில் 31% இருந்து 34 % உயர்த்தப்படுகிறது. 

மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கணக்கிட்டு இரண்டு மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை உடனே வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி ஊதியத்துடன் இணைத்து அக்டோபர் மாதம் வழங்கப்படும்.

திருத்தப்பட்ட அகவிலைப்படையை கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்கு குறைவாகவும் 50 பைசாக்கு அதிகமாகவும் இருந்தால் அதனை அடுத்து ஒரு ரூபாய் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 50 பைசாவுக்கு குறைவாக இருந்தால் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அரசாணையின்படி முழு நேர பணியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4100 முதல் ரூ.12,500 வரை  பெறக்கூடும். 

ஏற்கனவே தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் நடக்குமா? அல்லது வாபஸ் பெறப்படுமா? என்று தகவல் கிடைக்கவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ordinance was issued to raise the allowances for EB employees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->