கதறவிடும் தக்காளி விலை: தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன அமைச்சர்!
Organic Farming TamilNadu TN Government Periya Karuppan
கனமழை காரணமாக தமிழகத்தில் தக்காளி விலை தற்போது கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ஒரு கிலோ தாக்களில் ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
வெளி சந்தை மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தக்காளி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக தமிழக அரசு தரப்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் பசுமை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில், தக்காளி, வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் பசுமை பண்ணை மூலம் விலை ஏற்றத்தை அரசு தடுத்துள்ளது. இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் பசுமை பண்ணையை விரிவுபடுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது" என்று அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
Organic Farming TamilNadu TN Government Periya Karuppan