திண்டுக்கல் அருகே 17 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 நடுகற்கள் கண்டுபிடிப்பு.! இடது கையில் வில், வலது கையில் குருவாள் கொண்ட வீரன்.!
ottanchathiram nadukarkal found
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை அடுத்த சில்வார்பட்டியில் 17 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 நடுகற்கள் கண்டுபிடிக்கபட்டன. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் லட்சுமணமூர்த்தி மற்றும் அரிஸ்டாட்டில் தெரிவிக்கையில்,
"கண்டறியப்பட்ட இந்த சிற்பத்தில் வீரனின் கையில் அம்பு எய்தவாறும், இரண்டு பெண்கள் கையை உயர்த்திய நிலையிலும் தோற்றம் அளிக்கின்றன. வீரனின் இடுப்பில் குறுவாள், கைகளில் வளையல், இடது கையில் வில்லும், வலது கையில் குருவாளை பிடித்தவாறும் காட்சி அளிக்கிறார். வீரனின் அருகில் அவரது மனைவி மற்றும் மகளின் சிற்பமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல் 1.5 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட இரண்டு அடுக்குகளை உடையது. முதல் அடுக்கில் வீரன் போருக்கு செல்வதுபோலவும், இரண்டாவது அடுக்கில் வீரனின் ஆயுதங்களும் செதுக்கப்பட்டுள்ளது.
சிற்பங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இப்பகுதியில் கி.பி.17 -ஆம் நூற்றாண்டில் இனக்குழு மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் தெரியப்படுகிறது". என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
English Summary
ottanchathiram nadukarkal found