சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட பணத்தை இழந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை மணலியை சேர்ந்தவர் பெருமாள். இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக பெருமாள் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

இதில் பணத்தை இழந்த பெருமாள் வீட்டில் இருந்த பொருட்களையும் அடகு வைத்து ரம்மி விளையாடி வந்துள்ளார். இதையடுத்து பெருமாளின் மனைவி அவரை கண்டித்த நிலையிலும் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ரம்மி விளையாட்டில் தொடர்ந்து பணத்தை இழந்து வந்த பெருமாள், இழந்த பணத்தை மீட்க முடியாததால் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் பெருமாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Painter commits suicide by hanging himself after losing money in online rummy game


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->