மாடுகளின் கொம்புகளில் பெயிண்ட் அடிக்க உத்தரவு.? நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Painting on roadside Cow
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பு, நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்து வருகின்றன.
தமிழக சாலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2000க்கும் அதிகமான உயிர் எடுப்புகள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரத்தில் சாலை களில் பருத்தி கிடைக்கின்ற கால்நடைகளால் அதிக படியான விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துக்களை தடுக்க நாய்கள், மற்றும் கால்நடைகளுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் ஒளி பட்டால் பிரதிபலிக்கும் டேப்களை பொருத்தியுள்ளனர்.
அந்த வகையில் சாலையில் சுற்றித் திரிகின்ற கால்நடைகளுக்கு சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கின்ற பட்டைகளை பொருத்தும் படி உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக உள்துறை, மத்திய சாலைப் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறைகள் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளனர்.