பல்லடம் | தொடரும் உயிரிழப்பு - ஆத்திரமடைந்த பொதுமக்களின் அதிரடி நடவடிக்கை!
Palladam Continued dead peoples protest road blockade
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அமீர். இவரது மகன் சபியுல்லா (வயது 37) இவர் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் வசித்து, இருசக்கர வாகன பழுது பார்ப்பு ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் சின்னிய கவுண்டம்பாளையத்திற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சபியுல்லா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.
இந்த விபத்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சபையுல்லாவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆண்டு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சபியுல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரே காரை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த சேதி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் தற்காலிகமாக தடுப்புகள் வைத்தனர்.
மேலும் அதிகாரிகள் விரைவில் வேகத்தடை அமைக்கப்படும் தேனை தெரிவித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Palladam Continued dead peoples protest road blockade