தமிழகம் | உரிமையாளருக்கே தெரியாம நிலத்தை விற்ற கும்பல்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பெருமா கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மல்லிகா.  முத்துசாமியின் தாயார் அவருக்கு சொந்தமான வீட்டை முத்துசாமி பெயரில் எழுதி வைத்துள்ளார். 

இந்த நிலையில் முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ செலவிற்காக வீட்டை விற்பனை செய்ய குடும்பத்தார் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கோவையைச் சேர்ந்த தரகர் கோபிநாத் என்பவரை அணுகினர். கோபிநாத் தனது பெயரில் பவர் எழுதிக் கொடுத்தால் உடனடியாக விற்பனை செய்து தருவதாக தெரிவிக்கவே, அவரின் பெயருக்கு 'பவர்' எழுதிக் தரப்பட்டது. 

பின்னர் பலமுறை கோபிநாத்தை தொடர்புகொண்டபோது அவர் சரியான பதில் தெரிவிக்காத நிலையில், வீட்டின் பத்திரத்திற்கு வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, கோபிநாத், முத்துசாமிக்கு சொந்தமான வீட்டை ரூ. 35 லட்சம் ரூபாய்க்கு சத்யன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

பத்திரப்பதிவு மோசடிக்கு முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லை என போலியான மருத்துவ சான்றிதழ் தயாரித்து வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனை அடுத்து, முத்துசாமி குடும்பத்தினர் இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இப்புகார் திருப்பூர் மாவட்ட நில மோசடி புகார் பிரிவுக்கு மாற்றப்பட்டு இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palladam land owner complaint


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->