கோடி கணக்கில் பணம்! தமிழகத்தில் 3 இளைஞர்களிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே இரு வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

குமராராஜன் பேட்டை, மோட்டூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை மேற்கொண்டு வரும் அந்த இளைஞர்களின் வங்கி கணக்குகளில், குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு கோடி ரூபாய்க்கு அதிகமாக வங்கி பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. 

இது குறித்து வருமானத் துறை அதிகாரிகளிடம் இருந்து, அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வங்கி பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை பெற்று, இந்த மூன்று இளைஞர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருவதாக முதல் கட்டதகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு கோடி ரூபாய் பணம் யாருடைய வங்கி கணக்கில் இருந்து வந்தது? அவர்கள் யார்? எதற்காக இவர்களுக்கு அந்த பணத்தை கொடுத்தார்கள்? இந்த பணம் எங்கே தற்போது சென்றது? என்பது குறித்து இளைஞர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pallipatttu ED Inquiry 3 youngster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->