மின்சாரத் துறைக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் 'லடாய்' - இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு கடல்வழி தொடர்வண்டிப்பாலம் தான் "பாம்பன் பாலம்". பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள இந்த பாம்பன் பாலம் ராமேஸ்வரத்தையும், இந்திய நிலப்பரப்பையும் இணைக்கிறது. இந்த பாலம் 1914ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 

ஏறத்தாழ 2.3 கி. மீ தூரத்திற்கு அமைந்துள்ள இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் வழிப்பாலமாகும். இந்தப் பாலத்தின் வழியாக கடலில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக இந்தப் பாலத்தின் நடுவில் கத்திரி வடிவத்தில் தூக்குகள் அமைந்துள்ளன. 

இதையடுத்து 1988ம் ஆண்டு ரயில் பாலத்தின் அருகில் சாலைப் போக்குவரத்துக்கான பாலமும் திறக்கப்பட்டது. இந்நிலையில் 2022ம் ஆண்டு கடல் அரிப்பினால் ரயில் பாலம் பலவீனமடைந்ததால், ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

பாம்பன் பாலத்தின் இருபுறமும் 181 கம்பங்களில் மின் விளக்குகள் எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும். இந்தப் பாலம் நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது. பாலத்தின் நுழைவுப்பகுதியில் சுங்கச்சாவடி அமைத்திருந்தனர். இந்நிலையில் அரசு உத்தரவிட்டதையடுத்து 2017ம் ஆண்டு சுங்கச்சாவடி அகற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாம்பன் பாலத்துக்கான மின் கட்டணத்தை செலுத்துவதை நெடுஞ்சாலைத்துறை நிறுத்திக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாம்பன் ஊராட்சி நெடுஞ்சாலைத்துறையிடம் கேட்ட போது அவர்கள் கைவிரித்துவிட்டதாக தெரிகிறது. 

இதனால் மின்சாரத்துறை பாம்பன் பாலத்திற்கான மின்சாரத்தை துண்டித்துள்ளது. இதனால் இரவில் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுப்பது நலல்து என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pamban Bridge Plunged into Darkness


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->