பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு எச்சரிக்கை!! அவகாசம் முடியப்போகிறது!
PAN Card Aadhar link june 2023
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நெருங்கும் நிலையில், உடனடியாக அவற்றை இணைக்குமாறு பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில் ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும் என வருமான வரித்துறை கூறியுள்ளது. ஏற்கனவே பான் எண்ணை ஆதாருடன் இணைக்க பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்தது. அதோடு கடந்த மார்ச் 31-க்கு பிறகு விண்ணப்பிப்போருக்கு ரூ.1000 அபராதமும் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜூன் 30-ஆம் தேதி காலக்கெடுவை தவறவிட வேண்டாம் எனக் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் “வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 30.06.2023 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.
இன்றே உங்கள் பான் & ஆதாரை இணைக்கவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும். இதனால், நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் அத்தகைய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வட்டி ஆகியவையும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க விதிக்கப்படும் அபராதம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தகவல் வெளிதயாகியுள்ளது. ஆதாருடன் இணைக்காமல் பான் எண்ணை பயன்படுத்தும் போது ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுவரை இணைக்காதவர்கள் மேலும் தாமதிக்காமல் உடனடியாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
PAN Card Aadhar link june 2023