பரந்தூர் புதிய விமான நிலையம் | கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,  பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான விரிவான தொழில்நுட்ப பொருளாதார ( DTER ) அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு ஆலோசகர் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

அந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை டிட்கோ நிறுவனம் கோரியுள்ளது. மேலும், ஆலோசகர் நிறுவனம் விரைவில் நியமிக்கப்படும் என்றும்,சட்டப்பேரவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்தல் மற்றும் கடத்தலை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

குத்தகைதாரர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் செலவில் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. சட்டவிரோத கனிம கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில் வாகன கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்கான மென்பொருள் உருவாக்கப்படும்.

மேலும், 2022-23ம் ஆண்டில் மார்ச் 2023 வரை உரிய அனுமதி இன்றி கனிமங்களை கடத்திய 4,799 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன; ₹41 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும், கனிம கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கொள்கை குறிப்பில் வெளியான தகவலின்படி, சிப்காட் நிறுவனம், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 11 புதிய தொழில் பூங்காக்களை மொத்தம் 14,695 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது; இந்த இடங்களில் நில எடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parandur New Airport issue April 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->