பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு.. 200-வது நாளை எட்டிய மக்கள் போராட்டம்...!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய 13 கிராமங்களில் 4750 ஹெக்டர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராம மக்கள் நாள்தோறும் இரவு நேரங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டமானது இன்றுடன் 200வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஏராளமான போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் 200-வது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன போராட்டமானது நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டன போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 7 துணைக் கண்காணிப்பாளர்கள், 42 ஆய்வாளர்கள், 81 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1200 போலீசார் ஏகாம்பரம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 200வது நாள் போராட்டம் நடைபெற உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parandur people protest reached 200th day against airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->