பெற்றோரின் அலட்சியம்... அறையில் சிக்கி கொண்ட 6மாத குழந்தை... பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..! - Seithipunal
Seithipunal


வீட்டினுள்ளே சிக்கி கொண்ட கைகுழந்தையை தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் வசித்து வருபவர் நிதின். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஆறு மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு வேலைக்கு சென்ற கணவனை வழியனுப்ப சிந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது குழந்தை உள்ளே தூங்கி கொண்டிருந்த நிலையில் கதவு எதிர்பாராதவிதமாக கதவு தாழிட்டு கொண்டது.  சிந்து முயற்சி செய்தும் அதனை திறக்க முடியவில்லை.

இதனால்,  அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கதவை உடைத்து குழந்தையை காப்பாற்றி தாயிடன் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parental negligence Child trapped inside home Firefighters rescuing safely


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->