மதுரை : பெற்ற மகளைக் கட்டாயப்படுத்திக் குடிக்கவைத்த பெற்றோர் - மன உளைச்சலில் காவல் நிலையத்தில் தஞ்சம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை : பெற்ற மகளைக் கட்டாயப்படுத்திக் குடிக்கவைத்த பெற்றோர் - மன உளைச்சலில் காவல் நிலையத்தில் தஞ்சம்.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலை முடித்து இரவில் வீட்டிற்கு வரும்போது தினமும் மது குடித்துவிட்டு வருவதுடன், வீட்டில் வைத்தும் மது அருந்தியுள்ளார்.

இதனை அவரது மனைவியும் கண்டுகொள்ளாமல் காலப்போக்கில் அவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, கணவனும், மனைவியும் சேர்ந்து மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் சிறுமி என்றும் கூட பார்க்காமல் அவரை அடிப்பதும், வீட்டிற்கு வெளியே இரவு நேரத்தில் துரத்தவும் செய்துள்ளனர். 

சில நேரங்களில் தங்கள் மகளான சிறுமியையும் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி பெற்றோரின் இந்த செயலை பொறுத்துக் கொள்ள முடியாமல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் குழந்தைகள் நல குழும அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறுத் தெரிவித்துள்ளனர். அதன் படி காவல் நிலையத்திற்குச் சென்ற அதிகாரிகள் சிறுமியை மீட்டனர். 

அவருடன் கைபேசி மூலம் பேசிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parents forced daughter to drinks in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->