தீண்டாமையின் உச்சகட்டம்.!! பட்டியலின ஊழியர் காலை உணவு சமைப்பதால் டி.சி கேட்கும் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 25) நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட அனுமதிக்காமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெருமாநல்லூர் வள்ளிபுரம் ஊராட்சியில் காலிங்கராயன் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் சுமார் 47 மாணவர்கள் படித்து வரும் நிலையில் பட்டினத்தைச் சேர்ந்த தீபா என்ற பெண் உணவு சமைத்து மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார். 

இதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காத பெற்றோர்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு தரப்பில் சமையல் ஊழியரை மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் சமாதானம் ஆகாத ஒரு தரப்பினர் உணவை புறக்கணித்து சென்றனர். 47 மாணவர்களில் 34 மாணவர்கள் உணவருந்திய நிலையில் 13 மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறியும் திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுசாமி உடனடியாக பள்ளிக்கு விரைந்த நிலையில் பெருமாநல்லூர் காவல்துறையினர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தீண்டாமை கொடுமை மற்றும் வழக்குகள் குறித்து எடுத்துரைத்து தெளிவுபடுத்தி உள்ளதாகவும் இனி இதுபோன்று நடக்காது எனவும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents not allowed children to eat morning breakfast prepared by dalit worker


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->