சென்னையை காப்பாற்ற, அக்கறையுடன் அறிக்கையோடு வந்த சௌமியா அன்புமணி! இவ்வளவு விஷயம் இருக்கா என வாயடைத்து நின்ற மேயர் பிரியா!  - Seithipunal
Seithipunal


"சென்னை மாநகருக்கான காலநிலை மாற்ற வரைவு அறிக்கையில் காற்று மாசுபாடு , உயிர் பன்மைத்துவம் குறித்த செயல்திட்டங்கள் இடம்பெற வேண்டும், " என பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னை  மாநகராட்சி மேயர் பிரியாவை சந்தித்தார். 

சென்னை மாநகருக்கான ' காலநிலை மாற்ற  செயல்திட்ட வரைவு அறிக்கை ' மாநகராட்சி இணையதளமான www.chennaicorporation.gov.in ல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 26 ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி , சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியாவை சந்தித்து வரைவு செயல் திட்டம் குறித்த தங்களது அமைப்பின் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். 

சென்னைக்கான காலநிலை மாற்ற  செயல்திட்ட வரைவு அறிக்கையில் காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பாகவும் , உயிர் பன்மைத்துவம் குறித்தும் கருத்துகள் இடம் பெறவில்லை என்று தெரிவித்த அவர் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள 66 செயல்திட்டங்கள் குறித்தும் விரிவான விளக்கங்கள் இடம்பெற வேண்டும் எனவும்,  வரைவு அறிக்கை குறித்து சென்னையில் 200 வார்டுகளிலும் பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும் என மாநாகராட்சிக்கு கோரிக்கை விடுத்தார். 

மேயரை சந்தித்த பிறகு பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "பசுமைத் தாயகம் சார்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உட்பட பல இடங்களில் மரக்கன்று நட்டு வருகிறோம் . காலநிலை மாற்றம் குறித்து 20 ஆண்டுகளாக பேசி வரும் ஒரே அமைப்பு பசுமைத் தாயகம்தான். 

சென்னையில் காலநிலை மாற்ற வரைவு அறிக்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்க இன்று இறுதி நாள் என்று கூறியிருந்தனர். அதை நீட்டிக்கவும், தமிழில் வெளியிடவும் மேயரிடம் கோரிக்கை விடுத்தோம். சென்னைக்கு வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் 66 திட்டங்கள் கூறப்பட்டுள்ளது, ஆனால் அதுபற்றி விரைவாக விளக்கப்படவில்லை. 

தமிழகத்தில் மக்கள் தொகை 7.5 கோடி. சென்னையில் மட்டும்  ஒரு கோடி நபர்கள் வசித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை சீரமைக்க  விரிவான திட்டம் தேவை , அவசர கதியில் அதை செயல்படுத்த முடியாது. நீடித்த செயல்திட்டமாக அது இருக்க வேண்டும். கடலோரம் வசிப்போர் , விளிம்புநிலையில் வாழ்வோரிடம் காலநிலை மாற்றம் குறத்து அதிகளவில் விழிப்புணர்வை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். 

செஸ் ஒலிம்பியாட்டிற்கு வைக்கப்பட்ட விளம்பர பலகைகள்  போல,  காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளும் பல இடங்களில் வைக்கப்பட வேண்டும், சென்னையில் 200 வார்டுகளிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். 

2015 ல் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது வெளியிடப்பபட்ட அறிக்கையில் காற்று மாசு குறித்த பரிந்துரை இல்லை , bio diversity அழிவு குறித்தும் கருத்துகள் இடம் பெறவில்லை. சிட்டுகுருவி , கிளிச்சத்தம் இல்லாமல் போக காரணம் bio diversityஅழிவுதான். 

204 அமைப்பனரிடம் பேசி சென்னைக்கான அறிக்கையை  வெளியிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் 20 ஆண்டுகளாக செயல்படும் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. சென்னை மாநகருக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்க பசுமைத் தாயகம் தயாராக இருக்கிறது. சென்னை மாநகரை மேம்படுத்துவதற்காக 'நாம் விரும்பும் சென்னை ' என்ற அறிக்கையை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 

கூவம் சீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட 200 கோடி நிதி வீணாகிவிட்டது, 2007 முதல் சென்னையில் சாலை பாதுகாப்பு திட்டம் அமலில் இருந்ததாலும் அது பயன்தரவில்லை, சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நகரமாகவே சென்னை இப்போதும் இருக்கிறது. சென்னையில் பொதுப்போக்குவரத்து 20 சதவீதம் அதிகரிக்கும் என்று சொன்னார்கள் ஆனால் 23 சதவீதம் குறைந்துவிட்டது. எனவே பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டும் என மாநாகராட்சிக்கு கோரிக்கை வைத்தோம். சுற்றுச்சூழல்  குறித்த விசயங்களில் மக்கள் பங்களிப்பு அவசியம், எனவே பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும்" எனக் கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pasumai thayagam leader sowmiya anbumani met chennai mayor priya for climate change emergency


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->