மரத்திற்காக ஒப்பாரி வைத்த பெண்கள் - களமிறங்கிய பசுமை தாயகம்!
PASUMAI THAYAKAM PROTEST IN THIRUVALLUR
சென்னை வெளிவட்டச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக, திருநின்றவூர் புதுக்காலனி முதல் தாமரைப்பாக்கம் வரையிலான சாலையில் இருமருங்கிலும் நன்கு வளர்ந்திருந்த 500-க்கும் மேற்பட்ட மரங்களை தமிழக நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றி சாலை அமைத்து வருகின்றனர்.
தமிழக வளர்ச்சிக்கு சாலை வசதி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு மரங்களும், இயற்கை வளங்களை பாதுகாப்பதும் முக்கியம்.
சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்படும் இந்த மரங்கள் சுமார் 60 ஆண்டுகள் வயதுடையது. இந்த மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வழி வகை செய்யாமல், அதனை வெட்டி பலி கொடுப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பசுமைத் தாயகம் அமைப்பும், பாமகவும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ள நிலையில், இன்று, திருவள்ளூர், கொமக்கம்பேடு ஊராட்சியில் உள்ள மரங்களை வெட்ட வேண்டாம். மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும் என்பதை வலியுறுத்தி பசுமை தயக்கம் அமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடந்தது.
மேலும், மரத்தை கட்டிப்பிடித்து பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுதது பார்ப்பனர்களின் நெஞ்சை நெகிழ செய்ததுடன், இந்த மரங்களை கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
English Summary
PASUMAI THAYAKAM PROTEST IN THIRUVALLUR