அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை - காஞ்சிபுரத்தில் நோயாளிகள் அவதி.!
patients affected for no doctors in kanchipuram
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஏராளமானோர் உள்நோயாளிகளாவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி அருகில் உள்ள முசரவாக்கம், அய்யங்கார் குளம், பாலு செட்டி சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள ஆண்கள் பொதுநல நோயாளிகள் பிரிவில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆண்கள் பொது நலப் பிரிவில் பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே போதுமான மருத்துவர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் தெரிவிக்கையில், "காலை 6 மணி முதலே நோயாளிகள் ஓ.பி. சீட்டினை பெற்று மருத்துவம் பார்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம்.
ஆனால் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் நிலைமையை பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தொடர்ந்து கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
patients affected for no doctors in kanchipuram