பட்டுக்கோட்டையில் சடலமாக மீட்கப்பட்ட தாய், மகள்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
Pattukottai Mother daughter suicide
பட்டுக்கோட்டை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தாயும், 10 வயது மகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருந்து வருகிறது. இந்த குடியிருப்பில் ராமநாதன் (வயது 45) அவரின் மனைவி காலிஸ்வரி (வயது 35), மகள் நிவ்யதர்ஷினி (10 வயது) குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
ராமநாதன் பட்டுக்கோட்டை பகுதியில் டீக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இதில் அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் கடன் தொல்லையில் சிக்கியதாகவும் தெரிய வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த ராமநாதன், கொட்டிவாக்கம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. அங்கும் அவருக்கு கடன் நெருக்கடி தொடர்ந்து வந்ததால், நேற்று பட்டுக்கோட்டை வந்த நாமநாதனுக்கும், மனைவி காளீஸ்வரிக்கும் இடையே இந்த கடன் பிரச்சனை குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமநாதன் மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், நேற்று இரவு தூங்கச் சென்ற காளீஸ்வரி தனது மகளுடன் தூங்க சென்றுள்ளார்.
இன்று காலை இவரின் வீட்டு கதவு வெகுநேரமாகியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, காளீஸ்வரி தூக்கிட்ட நிலையிலும், அவரது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இருவரின் உடலையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Pattukottai Mother daughter suicide