வார விடுமுறை : பழனியில் குவியும் பக்தர்கள் கூட்டம்.!
pazhani murugan temple devotes crowd increase for holiday
தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படுவர் முருகன். இவருக்கு திருத்தணி, திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை உள்ளிட்ட அறுபடைகளில் வசிப்பவர்.
இதில், உலக புகழ்பெற்றதாக கருதப்படும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். அதிலும் தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை புரிந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று வார விடுமுறை என்பதால் கேரளா மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் உள்ளிட்டோரின் வருகை அதிகமாக உள்ளது. இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், தரிசன வழிகள் போன்றவற்றில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த கூட்டத்தின் காரணமாக வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்தவகையில் சுமார் ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
English Summary
pazhani murugan temple devotes crowd increase for holiday