பெரும் சர்ச்சை! அகற்றப்பட்ட அதே இடத்தில மீண்டும்!
Pazhani Murugan Temple Hindu Board issue
பழனி முருகன் கோவிலில் இருந்து அகற்றப்பட்ட 'இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி' என்ற அறிவிப்பு பலகை, நீதிமன்ற உ த்தரவுக்கு பின் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலுக்கு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் மாற்று மதத்தை சேர்ந்த சிலர் வின்ச் ரயில் மூலம் மலைக் கோவிலுக்கு சுற்றுலா செல்லும் நோக்கத்துடன் வந்துள்ளனர்.
அப்போது இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது.
சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த அறிவிப்பு பலகை கோயில் நிர்வாகத்தின் சார்பாக அகற்றப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும், பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், இந்து மதத்தினரின் நம்பிக்கையை சீர்குழக்கும் வகையில் சிலர் செயல்படுவதாகவும், முருகன் கோவிலில் இந்து மதத்தை சாராதவர்கள் நுழைய தடை விதித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, அந்த அறிவிப்பு பலகையை அங்கு வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பழனி மலை கோவிலுக்கு செல்லும் வின்ச் ரயில் நிலையம் நுழைவாயில் கதவுகளில், இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகை, மீண்டும் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது.
English Summary
Pazhani Murugan Temple Hindu Board issue