தீரா காதல்: மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விபரீத முடிவு! புகாரளித்த மகன்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி, பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புரு (வயது 70) இவரது மகன் பழனிசாமி. இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 

இதன் காரணமாக சுப்புரு மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சுப்புரு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்த அவரது மகன் தந்தையிடம் கேட்டபோது சுப்புரு விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிசாமி உடனடியாக அவசர ஊர்தி மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் நேற்று இரவு சுப்புரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக பழனிசாமி பெரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pennagaram elderly man commits suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->