திடீர் காய்ச்சலால் அவதி: அரசு மருத்துவமனையில் அலைமோதும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal



கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை கடலூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு குவிந்தனர். 

காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தது பொதுமக்கள் மழைக்கால நோய் தொற்றுக்கான சிகிச்சையை பெற்றுக்கொண்டு சென்றனர். 

இதன் காரணமாக சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனை முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. 

மேலும் சுகாதாரத் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது 12 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People flock fever government hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->