வடகிழக்கு மாநிலத்தினர் தமிழகத்தில் பாதுகாப்பை உணருகின்றனர்; கவர்னர் ரவி பேச்சு..!
People from the Northeastern states feel safe in Tamil Nadu
'' வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை குறிப்பாக மகள்களை தமிழகத்திற்கு படிக்க அனுப்பும் போது, பாதுகாப்பாக உணர்கின்றனர், '' என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேலும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு பலர் வருகின்றனர். இம்மாநிலம் விருந்தோம்பல் மிக்க மாநிலம். இதனால், இங்கு வருபவர்கள், இங்கேயே சொந்த வீட்டை உருவாக்குகின்றனர். இங்குள்ள மக்கள் மிகவும் சிறந்தவர்கள். விருந்தோம்பல் மிக்கவர்கள். மொழிகள் மற்றும் கலாசாரம் மிகவும் வளமானது. மனதை தொடும் அளவுக்கு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடகிழக்கு மக்கள், உயர் கல்வி படிக்க, குழந்தைகளை படிக்க தமிழகத்திற்கு அனுப்பும் போது, பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பெண் குழந்தைகள் வரும் போது எந்த பிரச்னையும் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், இந்த நம்பிக்கை டில்லிக்கு செல்லும் போது அவர்களுக்கு கிடைக்காது என்று தமிழக கவர்னர் ரவி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
People from the Northeastern states feel safe in Tamil Nadu