உத்தரபிரதேச மக்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டனர் - தயாநிதி மாறன்!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மக்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டனர் என திமுக எம்பி தயாநிதி மாறன் பேச்சு.

 மக்களவைத் தேர்தலில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியது. உத்திரபிரதேசத்தில் பாஜக பெரிய அளவிலான வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் மற்றும் பாஜகவினர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி 39 இடங்களில் மட்டுமே கைப்பற்றிய அதிர்ச்சி அளித்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாஜ் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது.

 தமிழக மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. பாஜக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக விஜய பிரபாகரனும் பாஜக கூட்டணியில் தருமபுரி மக்களவை தொகுதியில் சௌமியா அன்புமணியும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் பேசுகையில், தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி 40 இடங்களையும் வென்றதுக்கு ஒரே காரணம் நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளையும் பாஜகதான் வெற்றிபெறும் கருத்துக்கனிப்பு வெளியானது. உத்தரபிரதேசம் பாஜக ஆதிக்கம் உள்ள மாநிலம். அங்க எப்படி இண்டியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்று மீம்ஸ் போட்டு இருக்கார்கள். உத்தரபிரதேசம் மக்கள் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்து சுயமரியாதை கற்றுக்கொண்டு சென்று மோடி வேண்டாம் என வாக்களித்தாக மீம்ஸ்சில் போட்டு இருப்பதாக தயாநிதி மாறன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People of Uttar Pradesh came to Tamil Nadu to work and learned self respect Dayanidhi Maran


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->