#சென்னை - நள்ளிரவில் திடீர் சாலை மறியலால் பரபரப்பான தலைநகரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகரான சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே நீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதேபோன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் தலைநகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சென்னை திருமங்கலத்தில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோயம்பேடு முதல் வில்லிவாக்கம் பாடி வரை 3 கிலோ மீட்டர் பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் திருமங்கலம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் ஆகாத பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People road block protest for drinking water in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->