மும்மாரி மழை பொழிய.‌.. கருப்பண்ணசாமிக்கு 300 ஆடுகள் பலி கொடுத்த மக்கள்... பிரம்மாண்ட சித்திரை திருவிழா.! - Seithipunal
Seithipunal


சித்திரை திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டி பழனி கருப்பண்ணசாமி கோவிலில் 300 ஆடுகள் பலி கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுற்றுப்பட்டி கிராம மக்களுக்கு விருந்தும் பரிமாறப்பட்டது.

பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கொம்பையன் பட்டி கிராமத்தில் மிகவும் பழமையான பெரியதுரை கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மும்மாரி பொழிய வேண்டி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆடுகள் பலியிடுவது வழக்கம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக இந்த விழா நடக்காத நிலையில் இந்த வருடம் மிகவும் விமர்சையாக 300 ஆடுகளை வெட்டி  திருவிழா நடத்தப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு கருப்பண்ணசாமியை வழிபட்டனர்.

இந்த திருவிழாவில் கணக்கன்பட்டி எருமநாயக்கன்பட்டி மற்றும் மஞ்ச நாயக்கன்பட்டி உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 42 ஆண்டுகளாக இந்த திருவிழா கோம்பையன்பட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் மூலம் தங்களது நேர்த்தி கடன் நிறைவேறுவதாக அந்த கிராம மக்கள் நம்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People sacrificed 300 goats to Karuppannaswamy to pray for rain and celebrated Chitrai festival in grand style.


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->