பசி பட்டினி நீங்கி மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும்..முன்னாள் முதல்வர் நாராயணசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
People should live happily and get rid of hunger Former Tamil Nadu Chief Minister V Narayanasamy greets people on Tamil New Year
இனிவரும் காலங்கள் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் நம் நாட்டில் உள்ள பசி பட்டினி இவைகள் எல்லாம் நீங்கி மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.,
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:சித்திரை திருநாள் முதல் தேதி அன்று தமிழர்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடுவார்கள். தமிழ் புத்தாண்டு அன்று புத்தாடை உடுத்தி கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கி இனிவரும் காலங்கள் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் நம் நாட்டில் உள்ள பசி பட்டினி இவைகள் எல்லாம் நீங்கி மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், எல்லா உயிரினங்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும், இன்னல்கள் குறைந்து வாழ்க்கையில் மக்கள் நிம்மதியோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பார்கள்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவது மட்டுமல்லாமல் உற்றார் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
நம் நாட்டில் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவைகள் எல்லாம் தலை எடுகின்ற இந்த நேரத்தில் மக்களுக்கான அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கும் மக்கள் மன நிறைவோடு வாழ்வதற்கும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று இந்த சித்திரை திருநாளில் சபதம் ஏற்றுக் கொள்வோம்.
புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
.
English Summary
People should live happily and get rid of hunger Former Tamil Nadu Chief Minister V Narayanasamy greets people on Tamil New Year