விற்பனை செய்த சிறிது நேரத்தில் கெட்டு போகும் பால் - ஆவின் மீது குவியும் புகார்கள்.!
peoples complaint against aavin company for milk spoils
விற்பனை செய்த சிறிது நேரத்தில் கெட்டு போகும் பால் - ஆவின் மீது குவியும் புகார்கள்.!
விநியோகம் செய்த சில மணித் துளிகளிலேயே பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போவதாக பால் முகவர் சங்கம் ஆவின் நிர்வாகம் மீது புகார் தெரிவித்துள்ளது.
இந்த புகார் தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“தமிழகம் முழுவதும் ஆவினுக்கான பால் வரத்து இன்னும் குறைவாகவே உள்ளதால் பால் விநியோகத்தில் தொடரும் தட்டுப்பாடு, குளறுபடிகள், தரம் குறைந்த பால் பவுடர் மற்றும் வெண்ணையில் துர்நாற்றம் வீசுதல், பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போதல் என்று பால் முகவர்கள் ஏராளமான இன்னல்களை சந்திக்கின்றனர்.
பால் முகவர்கள் தங்களின் இன்னல்களை ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக கொண்டு சென்றாலும் கூட இந்த பிரச்சினைகளை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அந்தந்த மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் புகார் தெரிவிக்கும் பால் முகவர்கள் மீதே பழிவாங்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றனர்.
அதனை ஆவின் நிர்வாக இயக்குனர் கண்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதை பார்க்கும் போது ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் தனியார் பால் நிறுவனங்களோடு மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு ஆவின் பால் விற்பனையை பால் முகவர்களாக புறக்கணிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிரார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் அதிகளவில் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான ஒரே துறை என்றால் அது பால்வளத்துறையும், தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினும் தான்.
இதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஆவினை அழிவிற்கே கொண்டு செல்லும் என்பதை தமிழக முதல்வர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். #TNMilkAssociation @CMOTamilnadu @AavinTN” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
peoples complaint against aavin company for milk spoils