மின்கட்டண உயர்வு - தவெக தலைவர் விஜய் ஒதுங்கியிருப்பது ஏன்? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் இரவு மின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தன. 

ஆனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மட்டும் மின்கட்டண உயர்வு பற்றி பேசாமல் மௌனமாக இருப்பது அவர் திமுக ஆதரவாளரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதாவது, ஆரம்பத்தில் திமுக எதிர்ப்பாளர் போல் இருந்த தவெக தலைவர் விஜய், அதன் பிறகு நீட் தேர்வு விஷயத்தில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார் என்பதும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி மத்திய அரசுக்கு எதிரானவர் என்றும் காட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை பார்த்தால் அவரும் கமல்ஹாசன் போல் திமுகவின் ஆதரவாளரா? என்ற கேள்வியை சமூக வலைதளத்தில் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples questions about tvk leader keep silent electricity bill increase


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->