எண்ணூர் அருகே திரவ வாயு கசிவு - அச்சத்தில் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் கொண்டு வரப்படுகிறது.

அவ்வாறு கொண்டுவரப்படும் அமோனியா திரவ வாயு தொழிற்சாலையில் உள்ள பெரிய கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்த குழாய் மூலம் திரவ வாயு கொண்டுவரப்படாத போதிலும் குழாயில் திடீரென சேதம் ஏற்பட்டு, தேங்கியிருந்த வாயு வெளியேறி காற்றில் கலந்து பரவத் தொடங்கியது. 

இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்தி மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு பாதிக்கப்பட்டவர்ர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையறிந்த, பெரிய குப்பம் மற்றும் அதன் அருகில் உள்ள மக்கள் பயத்தில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மூலம் உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவம் மிகப்பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples worry for ennur ammonia gas leak


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->