பெரம்பலூர் : ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். 

அப்போது, ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது மகன்களுடன் வந்து திடீரென மண்எண்ணெயை தனது உடல் மற்றும் தனது மகன்களின் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு போலீசார், அந்த பெண்ணிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர்களை மீட்டனர்.

அதன் பின்னர், போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண் குன்னம் அருகே உள்ள பென்னகோணம் காலனி தெருவை சேர்ந்த மகேசின் மனைவி இளவரசி.

இவருக்கும் இவரது கணவர் மகேசுக்கும் இடையே சில காலமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துதுள்ளது, இதனால், மகேஷ் தன் குடும்பத்தை சரியாக கவனித்து கொள்ளாமல், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இது தொடர்பாக இளவரசி மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து இளவரசி கடந்த ஆறாம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அவர் நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் ஆட்சோய்யர் அலுவலகத்தில் அலுவலகத்திற்கு மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :- பெண் ஒருவர் பெண், தனது மகளுடன் ஆட்சியர் அலுவகத்திற்கு வந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண், குன்னம் அருகே கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி கலா என்பது தெரியவந்தது. 

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கலாவின் தம்பி தர்மராஜூக்கும் சில நாட்களாகவே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் தர்மராஜ் கலாவின் திருமணத்தின்போது கொடுத்த 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் போன்றவற்றைத் திருப்பித் தருமாறு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அவர் தனது மகளுடன் வந்து தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur collector office two womans sucide attempt with childrens


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->