ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுமா.? அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பசுமை பண்ணை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்தது.

மேலும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி மேலும் 10 ரூபாய் உயர்ந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதனை கருத்தில் கொண்டு தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் நாளை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyakaruppan consults about selling tomato in ration shops


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->