சாலையில் சென்றவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


 

மாடு முட்டி, சாலையில் நடந்து சென்ற ஒருவர் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம், மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் சபரிராஜன் (வயது 55). இவர் நேற்று காலை மேலகோட்டவாசல் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றார் . 

அப்போது அந்த வழியாக வந்த மாடு அவரை முட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சபரிராஜன் மீது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரினத்தார். இது தொடர்பாக நாகப்பட்டினம் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த சி.சி.டிவி கேமராக்களின் பதிவுகளில் இந்த விபத்திற்கும் ஓட்டுனருக்கும் தொடர்பு இல்லை என தெளிவாக இருந்தாலும் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது அரசு பேருந்து ஓட்டுநர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

மாடு முட்டி சாலையில் சென்று கொண்டிருந்தவர் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

person road got caught wheel government bus and died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->