பெருமாநல்லூர் இளம்பெண் கொலை வழக்கில் திடீர்திருப்பம்! கைதான இருவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


பெருமாநல்லூர் அருகே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 

கடந்த 25ஆம் தேதி உடைகள் கலைந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பெயர் சீத்தல் ரகசி என்பதும், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கணவனை இழந்த அவர் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வந்த பிகரை சேர்ந்த வினய்குமார், அவர் நண்பர் விகாஷ் குமார் ஆகிய மூவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, வினய்குமார், விகாஷ்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் நடத்திய சிறப்பு விசாரணையில், வினய்குமாரும் சீத்தல் ரகசியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

திருமணத்திற்காக வினய்குமாருக்கு அவரின் வீட்டில் பெண் பார்த்துள்ள செய்தி அறிந்த சீத்தல் ரகசி, வினய்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தனது திருமணத்திற்கு தடையாக இருந்த சீத்தல் ரகசியை அழைத்துச்சென்ற வினய்குமார், நண்பன்  விகாஷ்குமார் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perumanallur young lady murder case 28092023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->