தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு பீட்டா கடிதம்..! - Seithipunal
Seithipunal


ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஜல்லிகட்டு போட்டியை நடத்த கூடாது என தமிழக அரசுக்கு பீட்டா கடிதம் எழுதியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில்  உருவான ஓமைக்ரான் வைரச் தற்போது உலகின் பல இடங்களிலும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் ஓமைக்ரான் பரவல் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், ஓமைக்ரான் பரவல் காரணமாக வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி பீட்டா அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. பீட்டாவின் தலைமை செயல் அதிகாரி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு 2017-ம் ஆண்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதில் இருந்து இதுவரையில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 696 பேர் காயம் அடைந்துள்ளனர். 22 காளைகள் பலியாகி உள்ளன.

தற்போது ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் உள்ளது. கொடிய வைரஸ் தொற்றுடன் நாடே போராடி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற போட்டிகளுக்கு இடம் அளிக்க கூடாது.

எனவே மருத்துவர்களின் தொழில்முறை கருத்துகளுக்கு செவிசாய்த்து, பொதுமக்களை ஆபத்தான நோயில் இருந்து காக்கவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிக்கட்டு போட்டியை கைவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உருமாற்றம் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நல அபாயத்தை ஏற்படுத்த கூடும் என்பதால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தரக்கூடாது என்று தமிழக மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு 80 டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petta letter to Tamil Nadu government to ban Jallikattu in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->