மற்ற அமைப்புகளுக்கு விசாரணை வைக்காதது ஏன்? - மதிமுக துரை வைகோ கேள்வி..! - Seithipunal
Seithipunal


பாப்புலர் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா, உள்ளிட்ட எட்டு இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதை போல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்தது, பி.எப்.ஐ யின் அனைத்து இணையதள பக்கத்தையும் மத்திய அரசு முடங்கியுள்ளது.

இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர் கீதா கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ''பி.எப்.ஐ அமைப்பாக இருக்கட்டும், எஸ்டிபியாக இருக்கட்டும் எப்போதும் என்னுடைய கருத்து ஒன்றுதான்.  

"கடந்த காலங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் இருக்கிறது எனவே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேச நலனுக்காக இந்த விசாரணை செய்கிறோம், நடவடிக்கை எடுக்கிறோம் என்று என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை சொல்கிறது.

அப்போது இதேபோல், பல அமைப்புகள் இருக்கிறது. அந்த அமைப்புகளாலும் வட இந்தியாவில் பல கலவரங்கள் நிகழ்ந்துள்ளது. ஏன் அந்த அமைப்புகளுக்கு நீங்கள் விசாரணை வைக்கவில்லை. அப்படி விசாரணை வைத்தால் எல்லோருக்கும் சம அளவில் தான் வைக்க வேண்டும். 

இந்த விசாரணை வைத்ததற்கு பிறகு நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் கொங்கு பகுதியில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்ந்துள்ளது. அப்பொழுது இந்த சம்பவத்தின் நோக்கம் என்னவென்றால் அண்ணன் தம்பிகளாக இருக்கும் இந்து, முஸ்லீம் சகோதர உறவில் ஒரு வேற்றுமையை உருவாக்கி தங்களது வாக்கு வங்கியை நிரப்ப வேண்டும் என்று சில சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த சக்திகளுக்கு நாம் பலியாகிவிடக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pfi case mtmk durai vaiko raise question


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->