டீக்கடையில் இருந்த பி.எஃப்.ஐ தலைவர் கைது.. என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த பழனி அருகே திருநகரை சேர்ந்தவர் முகமது கைசர். இவர் பழனியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராகவும் முகமது கைசர் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் பழனி காந்த ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் இருந்த முகமது கைசரை தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பழனி நகர் காவல் நிலையத்தில் உள்ள போக்குவரத்து காவல் நிலைய அலுவலகத்தில் வைத்து முகமது கைசரிடம் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து டெல்லியில் இருந்து வந்த 5 பேர் கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் குழுவினர் முகமது கைசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தடை, கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் பலரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

அந்த வகையில் தற்பொழுது பழனியைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவது பழனியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PFI chief was arrested by NIA officers in tea shop


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->