ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட பி.எஃப்.ஐ அமைப்பு நிர்வாகி அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பிரிவினைவாத கருத்துக்களை பரப்புவதாகவும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகம் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்ததில் மிக முக்கியமான ஆவணங்கள் ஆதாரமாக கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் மதுரை மாவட்டத்தை அடுத்த நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பி.எஃப்.ஐ அமைப்பு நிர்வாகியான ஆட்டோ ஓட்டுனர் உமர் ஷெரீப் வீட்டிலிருந்து கத்தி, அறிவால், சுருள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக உமர் ஷெரீப்புக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் சமன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜரான உமர் ஷெரீப்பை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞர்களை மூளை சலவை செய்து பயங்கரவாத செயலுக்கு தயார் செய்தது மற்றும் ஆயுத பயிற்சி அளித்து வந்ததை உமர் ஷெரீப் ஒப்புக்கொண்டு உள்ளார். இதனை தொடர்ந்து உமர் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் 10வது நபர் என என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PFI organization member arrested for weapons training


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->