பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தானியங்கி எந்திரம் மூலம் மஞ்சப்பை விற்பனை அதிகரிக்க திட்டம்.! - Seithipunal
Seithipunal


பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து மக்கள் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மீண்டும் "மஞ்சப் பை" என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பொது இடங்களில் மக்கள் மஞ்சப்பை பயன்படுத்தும் வகையில் மஞ்சப்பை விற்கும் எந்திரம் தயாரிக்கப்பட்டது.

இந்த எந்திரத்தை பேருந்து நிலையம், ரயில் நிலையம், காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் மால், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வைப்பதன் மூலம் பிளாஸ்டிக் பைய்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும் என்று என்ற நோக்கத்தில் அரசு மஞ்சப்பை விற்பனை இயந்திரம் குறித்த கண்காட்சியை சென்னை வர்த்தக மையத்தில் நடத்தியது.

இதில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் தயாரித்த நிறுவனங்கள் பங்கேற்றுன. பல்வேறு அளவுகளில் மஞ்சப்பை இயந்திரம், தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஒவ்வொரு எந்திரமும் 500 ,1000 மஞ்சப்பைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 25 மஞ்சப்பை விற்பனை எந்திரம் வாங்குவதற்கு 2 நிறுவனத்திடம் அரசு ஆடர் கொடுத்துள்ளது. இதில் ஒரு எந்திரத்தின் விலை ஒரு லட்சம் ஆகும். ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த எந்திரம் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விரைவாக இந்த எந்திரம் நிறுவப்பட உள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் செயலாளர் தெரிவித்ததாவது, மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளோம் என்றும், வனப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இதனை நிறுவினால் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plan to increase the sale of manjapai at public places via automatic machine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->