கைரேகையுடன் கிடைத்த ஆட்டக்காய்கள் - வெம்பக்கோட்டை அகழாய்வில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரைக்கும் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 

இந்த அகழாய்வில், ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், செப்புக்காசுகள், வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால கருவிகள் உள்பட 2,700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்றைய அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம் மற்றும் அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காயில், தயாரித்தவர்களின் கைரேகை பதிவாகியுள்ளது. கைரேகையுடன் ஆட்டக்காய்கள் அரிதாக கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

play coins found in vembakottai excavation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->