11-ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு - எப்போது தெரியுமா?
plus 1 additional exam hallticket download
தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதற்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் வழங்கும் தேதியை தேர்வுத்த துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பதினொன்றாம் வகுப்பு துணைத் தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்தத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான அனுமதிச்சீட்டு (HALLTICKET) வருகிற 25-ம் தேதி வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதவிர, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது.
எனவே, உரிய வழிமுறைகளை பின்பற்றி தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், துணைத்தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
plus 1 additional exam hallticket download