பிரதமா் பிரசார நிகழ்ச்சியில் மாணவா்கள்: 3 தனியாா் பள்ளிகள் மீது பாய்ந்த வழக்கு.! - Seithipunal
Seithipunal


கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பிரசார நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க அழைத்துச் சென்ற மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கோவையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகன பிரசார நிகழ்ச்சியின் போது சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கோவை மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். 

மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 3 பள்ளிகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் கட்சி கொடி சின்னத்தை அளித்து கடவுள் வேதங்களை அணியச் செய்து, பள்ளி பேருந்தில் அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவை வடவள்ளி, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகள் மீது குழந்தைகள் சட்டம் பிரிவு 75 கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi campaign join Student Case against 3 private schools


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->