பிரதமர் மோடியின் தமிழக பயணத்தில் அதிரடி திருப்பங்கள்! அடுத்தடுத்த அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal



கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க நாளை பிரதமர் மோடி சென்னை வர உள்ளார்.

இரண்டு நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, வரும் 20ம் தேதி திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்படுகின்றன. வரும் சனிக்கிழமை மதியம் வரை கடைகளை மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, தனுஷ்கோடி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோதண்டராமர் சுவாமி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தபின், அரிச்சல் முனை பகுதிக்கும் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் ரீதியாக பாஜக நிர்வாகிகளையும், சில கூட்டணி கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக அத்தகவல் வெளியாகியுள்ளது.

இதில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரதமரை சந்திப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm Modi TamilNadu srirangam dhanushkodi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->