பெண்களுக்கு மாதம் 2000 - காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பு.!
congrass party announce 2000 money to womans
ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதனை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளைக் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார்.
அதாவது:- * பெண்களுக்கு மாதம் ரூ.2000
*பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம்.
* சாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்துவது,
* சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6,000,
* அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்,
* வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்,
* ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட 7வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
English Summary
congrass party announce 2000 money to womans