உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த அன்றே "திமுக அரசு கவிழும்" - மரண பீதியை ஏற்படுத்தும் பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, "தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து ஆகின்ற சூழல் வந்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நீதிபதிகள் கையில் எடுத்தால், அவர்கள் கேட்கின்ற முதல் கேள்வி, நீங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினீர்களா? என்று தான் கேட்பார்கள். 

எந்த அதிகாரத்தில் இந்த சட்டம் இருக்கிறது..? இதே கேள்வியை தான் கடந்து 2009 ஆண்டும் நீதிபதிகள் கேட்டனர். ஒன்பதாவது அட்டவணையில் நமக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னால், அதற்கு மறுப்பு கிடையாது. 

இது குறித்து முதலமைச்சர், அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரிடமும் தெரிவித்து கொண்டு இருக்கிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அவர்கள் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிற முதலமைச்சருக்கு, நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். எல்லா அதிகாரமும் உள்ளது. பீகார் மாநிலத்தில் Indian strategical act 2008 படிதான் அங்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு பீகார் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. அதை அனுமதித்துள்ளார்கள். 

இதே போல் ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து விட்டார்கள். ஒரிசா, ஜார்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இவ்வளவு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது. தமிழகத்தில் உள்ள முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியன் ஸ்டேடர்ஜிக்கள் ஆக்ட் 2008 படி பஞ்சாயத்து தலைவருக்கு கூட அதிகாரம் உள்ளது. முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்காதா என்ன?

உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். ஆனால் இவர்கள் ஏதோ ஒரு முக்கிய அரசியல் காரணத்துக்காக இந்த கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறார்கள். என்ன அரசியல் காரணம் என்று அவர்கள் தான் விளக்கம் கூற வேண்டும். இது சமூக நீதி பிரச்சனை. 

முதலமைச்சர் சொல்கிறார், மத்திய அரசுதான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார். மத்திய அரசு எடுத்தால் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு. ஒவ்வொரு பத்தாண்டுக்கும் எடுக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக அது எடுக்கப்படவில்லை. தற்போது 2026 ஆம் ஆண்டு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்த உள்ளது. 

அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாலும், ஜாதிகளின் தலைகளை மட்டும் தான் எண்ணுவார்கள். அந்த சமுதாயங்களின் நிலை என்ன? அந்த மக்கள் எந்த அளவுக்கு பின்தங்கி உள்ளார்கள்? இதெல்லாம் அவர்கள் எடுக்க முடியாது. அவர்களுக்கு தெரியாது. 

உண்மையிலேயே உங்களுக்கு சமூக நீதி மீது அக்கறை இருந்தால், எந்தெந்த சமுதாயம் எந்தெந்த நிலையில் இருக்கிறது? பொருளாதார ரீதியாக எந்த நிலையில் இருக்கிறது? என்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டும். 

மத்திய அரசு எடுப்பது காஸ்ட் சென்சஸ், சாதிவாரி கணக்கெடுப்பு. நாங்கள் கேட்பது காஸ்ட் சர்வே. உதாரணமாக இப்போது மலை குறவர்கள் சமுதாயம் இருக்கிறது என்றால், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் படித்து உள்ளார்கள்? அவர்களுக்கு வீடு உள்ளதா? குடிசையில் இருக்கிறார்களா? கழிப்பறை இருக்கிறதா? பட்டதாரிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அரசு பதவியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அதை எல்லாம் எடுத்து, அவர்களுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நலத் திட்டங்களோ? இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதி. 

அதை விட்டுட்டு நான் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மாட்டேன், எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதெல்லாம் கோழைத்தனமாக தான் நான் பார்க்கிறேன். இருக்கின்ற அதிகாரத்தை இல்லை என்று சொல்வது கோழைத்தனம். 

மீண்டும் சொல்கிறேன், 69 சதவீத இட ஒதுக்கிடக்கு ஆபத்து வந்திருக்கிறது. ஒரு காலகட்டத்தில் இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால், அன்றே திமுக அரசு கவிழும். அன்றே வீட்டுக்கு செல்ல வேண்டியது தான். உங்கள் கட்சியும் போய்விடும். இதையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு திரும்ப திரும்ப நாங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Say About Caste Census and DMK Govt SC Reservation Case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->